பணியாளர்களை இந்தியா திரும்பியழைத்துள்ளது..!!

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அரைவாசி பணியாளர்களை இந்திய பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பியுள்ளது.

ராஜதந்திர ரீதியில் உளவுப்பார்த்ததாகவும் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருந்தாகவும் குற்றம் சுமத்தி இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.

அத்துடன் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இருந்து அரைவாசியான தமது பணியாளர்களை இந்தியா திரும்பியழைத்துள்ளது.

எனினும் இந்தியாவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் இன்னும் கருத்து எதனையும் கூறவில்லை.

ஏற்கனவே இந்தியா¸ பாகிஸ்தானிய பணியாளர்கள் இருவரை திருப்பியனுப்பியது.

இதனையடுத்து பாகிஸ்தானில் இரண்டு இந்திய உயாஸ்தானிகரக பணியாளர்கள் வீதிவிபத்து ஒன்று தொடர்ப்pல் பாகிஸ்தானிய அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டதாக பாகிஷ்தான் கூறியது

எனினும் பாகிஸ்தான் குறி;த்த இரண்டு இந்தியர்களையும் கடத்திச்சென்றதாக இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

குறித்த இருவரும் நேற்று இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையிலேயே இன்று இந்தியா¸ பாகிஸ்தானிய உயர்ஸதானிகரக அதிகாரிகளை அனுப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related posts