இந்தியாவை மிரட்டும் கொரோனா: 4 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு..!!

கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், 445 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (ஜூன்-22) காலை 8.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சால் வெளியிட்ப்பட் கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 25 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக புது டெல்லியில் 2 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 59 ஆயிரத்து 746 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 757 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 663 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 ஆயிரத்து 260 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 195 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts