சமூக இடைவெளி பேணலுடன் ஜூம்ஆ தொழுகை

கொவிட்19 அசாதாரண நிலை காரணமாக மிக நீண்ட நாட்களுக்கு பின்பு சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வக்பு சபையின் கட்டளைக்கு ஏற்ப ஜூம்ஆ தொழுகைகள் நாடு பூராகவும் இன்று (19)இடம் பெற்றது.சமூக இடைவெளி பேணப்பட்டு பள்ளிவாயல்களில் தொழுகைகள் இடம் பெற்றன. தொழுகைக்காக தொழுகை விரிப்புகளை வீட்டில் இருந்து மக்கள் பள்ளிக்கு…

மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஏற்பட்ட அதிர்ப்தி காரணமாக அதில் இருந்து விலகினேன் …

கடந்த பொதுத்தேர்தல் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துசெயற்பட்ட நிலையில் அதன் செயற்பாடுகளில் ஏற்பட்ட அதிர்ப்தி காரணமாக அதில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டதாக பொதுஜன பெரமுன சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.ரவீந்திரன் தெரிவித்தார். இன்று காலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

மேலும்

இந்துக் குருமார்களின் நல்லாசியினைப் பெற்ற யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும்¸ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்¸ வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்துக் குருமார்களின் நல்லாசியினைப் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் குருமார்கள் செங்கலடி ரமேஷ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் வைத்து பூசைகள் இடம்பெற்று பின்னர் தங்களது ஆசியை சீ.யோகேஸ்வரனுக்கு வழங்கினர்.…

மேலும்

ஆசிய கிண்ணத்தினை கைப்பற்ற முடியும்..!!

களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டால் அடுத்த ஆசிய கிணத்தினை கைப்பற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைவர் அஸ்கார் அப்கான் தெரிpவத்துள்ளார்.

மேலும்

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு..!!

அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனங்கள் மீது அதிநவீன இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்கள் அரசாங்க நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தனியார் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பல மாதங்களாக தாக்குதல்கள் குறித்த தரவுகள் அவதானிக்கப்பட்டு வந்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும்

சட்டத்துறை மாணவர் பிணையில் விடுதலை..!!

விபத்தில் உயிரிழந்த  காவற்துறை உத்தியோகத்தர் தொடர்பில் கைது செய்யப்பட்ட  24 வயதுடைய  சட்டத்துறை மாணவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தரிந்து ரத்வத்த எனும் 24 வயதுடைய  மாணவரே  இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த காவற்துறை ஊத்தியோகத்தரே விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்

கீர்த்தி சுரேஷின் “பெண்குயின்” திரைப்படம் ..!!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. மேயாத மான்,  மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் கீர்த்தி சுரேஷின் 24 ஆவது…

மேலும்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது..!!

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்…

மேலும்

சாரதிகள்பணிபுறக்கணிப்பு ..!!

பிலியந்தலை பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்து சாரதிகள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு பதிலாக பழைய பேருந்து தரிப்பிடத்தினை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்

சபித்த எனப்படும் சபித்த தினேஸ் கைது..!!

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவொன்றின் உறுப்பினரான சபித்த எனப்படும் சபித்த தினேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை விசேட அதிரடிப்படையினரால்; ராகமை தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரிடமிருந்து கைக்குண்டு, துப்பாக்கி, கேரள கஞ்சா போதைப்பொருள் ஆகியவற்றுடன் சிற்றூர்ந்து ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக காவற்துறை விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

மேலும்