வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம்..!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குற்றத்தடுப்பு பிரிவினர் சி.சி.ரி.வி.யின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts