சுத்தமான குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள்…!

குடிப்பதற்கு சுத்தமான நீர கிடைக்காமல் ஹபரனை வாழ் மக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஹபரனை பாலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வேரகல என்ற பகுதியில் உள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் அங்குள்ள மக்கள் சிறுநீரக நோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடகாலமாக சுமார் 50 பேர் வரை இவ்வாறு சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்சமயம் 30 பேர் இவ்வாறு சிறுநீரக நோயாள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது

Related posts