அதிக நீளமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன

2020 பொதுத்தேர்தலின்போது பயன்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்காக அதிக நீளமான வாக்குச்சீட்டு;க்கள் அச்சிடப்படவுள்ளன.
அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
அரச அச்சகர் கங்கானி கல்பனாவின் தகவல்படி இந்தமுறை தேர்தலில் 23 அங்குல நீளமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன.
இதேவேளை கொழும்பு¸ வன்னி¸ மட்டக்களப்பு¸ திகாமடுல்ல ஆகிய மாவட்;டங்களுக்காக 9 அங்குல அகலமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடபப்படவுள்ளன.
குறித்த மாவட்டங்களில் அதிகமானோர் இந்தமுறை தேர்தலி;ல் போட்டியிடுவதன் காரணமாக இவ்வாறான வாக்குசீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.
இதேவேளை பொதுத்தேர்தலுக்காக அரச அச்சகத்தினால்¸ 17 மி;ல்லியன் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பமாகியுள்ளன.

Related posts