முல்லைத்தீவில் தவறான முடிவினால் பலியாகிய சிறுவன்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவின் மாத்தளன் பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அவன் உயிரிழந்துள்ளான் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
அம்பலவன் பொக்கணை கிராமத்தினை சேர்ந்த 15 அகவையுடைய கிருஸ்மூர்த்தி துஸ்யந்தன் (மதுசன்) என்ற சிறுவனே இவ்வாறு தவறான முடிவினால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான்

இன்று காலை வீட்டில் இருந்து விளையாடிய சிறுவன் தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டுள்ளான் தாயார் வேலை முடிந்து வீடு வந்து பார்த்தபோது சிறுவன் தூங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான் உடனடியாக சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எடுத்து சென்றபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளான் என வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்கள்

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . சிறுவனின் உடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

Related posts