மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் உடலம் நாளை காலை வெவண்டனுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் உடலம் நாளை காலை அவரின் சொந்த பெருந்தோட்டமான வெவண்டனுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
கம்பளை, புசல்லாவ வழியாக இந்த உடலம் எடுத்துச்செல்லப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமான ஆறுமுகன் தொண்டமானின் உடலம் முன்னதாக அவரது இல்லத்தில் -வைக்கப்பட்டு பின்னர் நேற்று நாடர்ளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஜனாதிபதி உட்பட்ட அனைத்து நாடர்ளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலிக்கு பின்னர் உடலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில் நேற்று இரவு வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இன்று வெவண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடலம் நாளை நுவரெலிய வழியாக கொட்டக்கலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலியின் பின்னர் 31 ஆம் திகதி நோர்வூட்டில் தகனம் செய்யப்படவுள்ளது

Related posts