நாடளாவிய முழு நேர ஊரங்குச்சட்டம் அமுல்செய்யப்படும்..!!

எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 மற்றும் 5 திகதிகளில் நாடளாவிய முழு நேர ஊரங்குச்சட்டம் அமுல்செய்யப்படும் என்று ஜனாhதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனவைரஸ் அச்சத்தின் மத்தியில் தேவையற்ற மக்கள் நெரிசலைக்கட்டுப்படுத்துவதனை நோக்காகக்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு சுகாதார அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பினருடன் கலந்தாலோசனை செய்தபின்னரே இந்த முடிவு எடுக்கப்;பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று புதன்கிழமை மாலை வரையில் ஊரடங்கை நீடிப்பதில்லை என்று அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருந்தனர்.

எனினும் கடற்படையினர் மத்தியில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் ஊரடங்கை தொடருமாறு ஜனாதிபதி நேற்று இரவு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் ஜூன் முதலாம் திகதியில் இருந்து மூன்றாம் திகதி வரையில் பின்னர் ஜூன் 6ஆம் திகதியில் இருந்து மறுஅறிவி;த்தல் வரை வழமையான அடிப்படையில் இரவு 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4மணி வரையில் ஊரடங்கு அமுல்செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது

2025 ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தியில் தன்னிறைவைக் கருத்திற்கொண்டு இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது

இதன் மூலம் வருடாந்தம் பால் மா வகைகளுக்காக செலவிடும் 50 பில்லியன் ரூபாய்களை மிச்சப்படுத்தமுடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது பால் உற்பத்தி 1.2 மில்லியன் லீற்றர்களாகும்.

2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு மேலும் ஒரு லட்சம் லீற்றர்களால் பால் உற்பத்தியை உயர்;த்தமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கையில் நாளொன்றுக்கு 3.5மில்லியன் லீற்றர் பாலுக்கான கேள்வி உள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கடற்படையின் வாகன சாரதி ஒருவர் கொரோனா தொற்றக்கு உள்ளானமை கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கபூர் கட்டிடம் கடற்படையினர் மற்றும் அவர்களின் வாகன சாரதிகள் ஆகியோர் பயன்படுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பி;டத்தக்கது.

Related posts