கிழக்கு ஆளுனர் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

இலங்கை நாட்டுக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்(ஓய்வு பெற்ற) முஹமட் சாட் கட்டாக் இன்று (28) கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார்.

கிழக்கு ஆளுனர் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு இடையில் இடம் பெற்ற குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் இதற்காக பூரணமான உதவி ஒத்தாசைகளை வழங்குவதாகவும் தெரிவித்த உயர்ஸ்தானிகர் சுற்றுலா அபிவிருத்தி இவிவசாய துறை உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டுக்கு கைகோர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் போது கிழக்கு ஆளுனரால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் வெற்றிகரமானதாக முடிவுற்றது.

Related posts