ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ரத்து..!!

கட்டாரில் இருந்து இன்று இலங்கைக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது

இந்த விமானத்தில் இலங்கையர்கள் 273பேர் அழைத்துவரப்படவிருந்தனர்.

எனினும் ஏற்கனவே கடந்த 19ஆம் திகதி அழைத்து வரப்பட்ட 466 இலங்கையர்களில் 70 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்ட நிலையிலேயே இன்றைய விமானச்சேவை ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சர்வதேச உறவுக்கான மேலதிக செயலர் ஜயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 19ஆம் திகதியன்று கொரோன தொற்றாளர்களுடன் 466பேர் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டநிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பணியாற்றும் பலருக்கு நேற்று பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts