வளிமண்டலத்தில் தளம்பல்¸ மழைக்கான வாய்ப்பு உள்ளது.

இலங்கையைச் சு10ழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்¸ சப்ரகமுவ¸மத்திய¸ வடமேல்மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது

கேகாலை¸ இரத்தினபுரி¸ நுவரெலியா¸ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் சில பிரதேசங்களில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதற்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது

Related posts