ரோமானியவில் நாட்டுக்கு திரும்பமுடியாமல் நிர்க்கதியாக இலங்கையர்கள்..!!

ரோமானியவில் உள்ள விமானநிலையத்தில் 36 இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பமுடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர் என்ற தகவல் தொடர்பில் அங்கிருக்கும் இலங்கையின் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

குறித்த இலங்கையர்கள் தாம் பணியாற்றிய தொழிலகங்களுக்கு செல்ல மறுத்தமைக் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் உட்பட்டவர்கள் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் அதன் பின்னர் இலங்கையர்கள் உட்பட்ட பணியாளர்கள் தமது தொழிலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் இலங்கையின் தூதரக அதிகாரிகள் தலையீடு செய்தநிலையில் 4பேர் மாத்திரம் மீண்டும் தமது தொழிலகத்துக்கு செல்ல உடன்பட்டனர்.

இதனையடுத்தே எஞ்சியவர்கள் தற்போது இலங்கை திரும்புவதற்காக விமானநிலையத்துக்கு வந்திருப்பதாக ரொமானியாவில் உள்ள இலங்கையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts