இலங்கை கிரிக்கட்அணியின் முன்னாள் வேகப்பந்துவீரர் விளக்கமறியலில்..!!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கிரிக்கட்அணியின முன்னாள் வேகப்பந்து வீரர் செஹான் மதுஷங்கவை ஜூன் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குருநாகல் குளியாப்பட்டி பன்னல வைத்து அவரும் மற்றம் ஒருவரும் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

இவரிடம் இருந்து 2.7 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.

இவர் இலங்கையின் கிரிக்கட் அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார்.

வலது கை பந்துவீச்சாளரான இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி ஒன்றில் பங்களாதேஸ் அணிக்கு எதிராக ஹெட்ரிக் சாதனையை நிலைநாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts