இராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உரிய முறையில் முகக்கவசம் அணியாது பயணித்துள்ளனர்.

அதனை முறையாக அணியுமாறு இராணுவத்தினர் கூறியதை அடுத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவானிடம் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்த அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts