இந்திய பிரதமர் இலங்கையின் ஜனாதிபதியுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடல்..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று காலை சுமார் 20நிமிடம் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது இலங்கையில் கொரோனதொற்றை கட்டுபடுத்த கோட்டாபய ராஜபக்ச எடுத்துவரும் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.
தெளிவான சிந்தனையும் கடுமையான தீர்மானம் நிறைவேற்றும் ஒருவராக கொரோன கட்டுப்பாட்டு விடயத்தில் கோட்டாபய ராஜபக்ச நடந்துக்கொள்வதாக மோடி இதன்போது குறிப்பிட்டார்.
கலந்துரையாடலின்போது இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
கொரோனவுக்கு பின்னர் இலங்கையின் பொருளாதாரம் குறித்த கருத்துரைத்த கோட்டாபய ராஜபக்சஇ நவீன தொழில்நுட்ப விடயத்தில் இந்தியாவின் பெறுமதிமிக்க முதலீடுகளை தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்
இதற்கு பதிலளித்த நரேந்திர மோடிஇ கொரோனா வைரஸ் நிலைமை சீரடைந்தததும் இலங்கைக்கான முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் இந்தியாவில் வீதிக் கண்காட்சிகள் நடத்தப்படும் என்று உறுதியளித்தார்

Related posts