அனைத்து பாடசாலைகளிலும் கொரோன பாதுகாப்பு வேலை திட்டம் நிறுவப்படும்.

அனைத்துப்பாடசாலைகளிலும் உடல் வெப்பத்தை அளவிடும் கருவிகள்இ கைகளை கழுவுவதற்கான இடங்கள் மற்றும் நோயாளர்கள் அறைகள் என்பன நிறுவப்படும்
கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்காக 680 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஒவ்வொரு 200 மாணவர்களுக்குமான செயற்பாடுகளுக்காக 30ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்விகற்பதற்கான முழுமையான சூழ்நிலை ஏற்படும்போதே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts