பொதுத்தேர்தல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை..!!

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ரத்துச்செய்யவேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை இன்றும் தொடரவுள்ளது.

இந்த பரிசீலனை இன்று ஐந்தாவது நாளாக முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை¸பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய¸ நீதியரசர்கள் புவனக்க அலுவிஹார¸ சிசிர டி ஆப்ரூ¸ பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

ஜூன் 20 தேர்தலை நடத்தக்கூடாது என்று கோரும் வகையில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts