இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் தென்¸மேல்¸ சப்ரகமுவ¸ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

எனவே இடி¸ மின்னல் வேளைகளில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவதன் மூலம் சேதங்களை குறைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

இதேவேளை நேற்று வடபகுதியின் யாழ்ப்பாணம்¸கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் வீசிய காற்றினால் சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts