சிங்கப்பூரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது..!!

சிங்கப்பூரில் சூம் என்ற காணொளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்;டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனவைரஸ் காரணமாக சிங்கப்பூரில் முடக்கல் நிலை தொடர்கிறது

இந்தநிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இந்த புனிதன் கணேசன் என்பவருக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற போதைவஷ்து கடத்தல் தொடர்பிலேயே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொழில்நுட்பத்தின் ஊடாக மரணதண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிங்கப்பூரில் 2013இல் இருந்து போதைவஸ்து தொடர்பான குற்றங்கள் பூஜ்ஜிய நிலைக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்;டு வருகிறது.

இதன்படி அங்கு கடந்த 20வருடங்களில் 18பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related posts