அம்பாஹ்ன் சூறாவளி இந்தியாவிலும் பங்களாதேசிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டிருந்த அம்பாஹ்ன் சூறாவளி நேற்று பிற்பகல் வடக்கு கரையை கடந்த நிலையில் இந்தியாவிலும் பங்களாதேசிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோன பரவலுக்கு மத்தியில் கொத்கத்தாவில் 72பேரும் பங்களாதேசில் 12பேரும் இந்த சூறாவளியினால் மரணமாகினர்.

கொல்கத்தாவில் 14 மில்லியன் மக்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்;டுள்ளது.

இந்தநிலையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்களைவி;;;ட்டு வெளியேறியுள்ளமையால் அவர்களை கொரோன ஒழுங்குவிதியின்படி சமூக இடைவெளியுடன் தங்கவைப்பதி;ல் பாரிய பிரச்சனையை அதிகாரிகள் எதிர்நோக்கி வருகின்றனர்.

Related posts