தமது நாட்டவர்களை அழைத்துச்செல்ல இந்திய அரசாங்கம் சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனவைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள தமது நாட்டவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச்செல்ல இந்திய அரசாங்கம் சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதியன்று எயார் இந்தியா விமானம் ஒன்று இதற்காக மும்பாயில் இருந்து கட்டுநாயக்கவுக்கு வரவுள்ளது.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் பதிவுசெய்தவர்களின் அடிப்படையில் இந்தியர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இதில் தொழிலாளர்கள் மற்றும் குறுகிய கால வீசாவில் வந்து அது முடிவடைந்தவர்கள்¸ மருத்துவ அவசரம் உள்ளவர்கள்¸ முதியவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லமுடியாமல் உள்ள இந்திய பிரஜைகள் தம்மை இதுவரை பதிவுசெய்துக்கொள்ளவில்லையெனில்https://hcicolombo.gov.in/COVID_helpline. என்ற இணையத்துக்கு சென்று தம்மை பதிவுசெய்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts