சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை அமெக்க புலனாய்வு சேவை தேடிவருகிறது.

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையில் பிறந்த அமெரிக்கர் ஒருவரை அமெக்க புலனாய்வு சேவை தேடிவருகிறது.

சமிந்த பிரபாத் பள்ளியகுரு என்ற இந்த அமரிக்கர் 2020 மார்ச் 7ஆம் திகதி ஒஹியோ என்ற இடத்தில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏப்ரல் 21ஆம் திகதி அவரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையில் பள்ளியகுருவை இறுதியாக கலிபோர்னியாவி;ல் மெக்சிக்கோ எல்லைப்புறத்தில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் இலங்கைக்கும் அடிக்கடி வந்துசெல்பவராவார். எனவே அவரை கண்டவர்கள் உடனடியாக அமரிக்கா எப்பிஐ புலனாய்வு சேவையினருக்கோ அல்லது அருகில் உள் அமரிக்க தூதரகத்துக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்;டுள்;ளனர்.

Related posts