உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49..!!

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49லட்சத்தை கடந்துள்ளது.

3லட்சத்துக்கு 23ஆயிரம் பேர் கொரோனவினால் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 25 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை¸ நேற்று¸ செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது.

உயிரிழந்தவர்களின்; எண்ணிக்கையும் 3¸000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்¸ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12¸448 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் நேற்று மட்டும் 1179 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காரணமாக அந்த நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இறப்பு எண்ணிக்கை அங்கு 18¸000-ஐ கடந்துள்ளது.

இதேவேளை கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால் இழக்கவேண்டியேற்பட்டுள்ளது.

இதனால் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

Related posts