கொரோனா தோற்றம், பரவல் குறித்து விசாரணை நடத்த 110 நாடுகள் ஆதரவு..!!

கொரோனா வைரசின் தோற்றம் குறித்தும் தொடக்க காலத்தில் அந்த வைரஸ் பரவல் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்தும் உலக சுகாதாரஅமைப்பு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு சுமாா் 110 -க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நேற்று நடந்த உலக சுகாதார மையம் உறுப்பினர்கள் கூட்டத்தில் சுயாதீன விசாரணையை உலக நாடுகள் வலியுறுத்தின.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பெரிய அளவில் உலகம் முழுக்க சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது, வுஹான் சந்தையில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி உள்ளது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் ஆராய்ச்சி மையத்தில்இருந்து வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேககங்களும் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த உண்மைகளை சீனா மறைக்கிறது,தொடக்கத்தில் சீனா இதில் பொய் சொல்லிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது.

இதை உலக சுகாதார மையம் கேள்வி எழுப்பவில்லை என்று கூறி அமெரிக்கா உலக சுகாதார மையத்திற்கு அளித்த நிதியை நிறுத்தி உள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில்110 -க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவில் விசாரணை நடத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

இது சீனாவிற்கு பெரிய அழுத்தமாக மாறியுள்ளது.

உலக நாடுகளின் கோரிக்கையை அடுத்து முடிந்தவரை விரைவாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தலைவா் டெட்றாஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

ஆனால் முழுக்க கொரோனா பாதிப்பு குறைய வேண்டும். அப்போதுதான் விசாரணையில் கவனம் செலுத்தமுடியும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா வைரஸ் தோற்றம், பரவில் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரிக்க விரும்பினால்அதற்று ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் ஏற்கனவே தெரிவித்திருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts