பொத்துவில் ரஜ மகா விஹாரை மற்றும் அதன் நிலத்தை பாதுகாக்க உடனடியாக ஒரு கடற்படை பிரிவை நிறுவுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு உத்தரவிட்டார்.
குறித்த விகாரைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் தலைமையிலான குழுவினர் நேற்று (14)விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர் இதன் போது அங்கு இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோதபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்
மகா விஹாரைக்கு சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு கடற்படை இன்று (15) முதல் மகா விஹாரா வளாகத்தில் நிறுத்தப்படும் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
மகா விஹாராவுக்கு சொந்தமான நிலம் பறிமுதல் செய்வது மற்றும் அப்பகுதியில் நடைபெற்று வரும் பிற மோதல்கள் குறித்து விசாரிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோரிய கோரிக்கையைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் விஹாரையினை வளாகத்தினை பார்வையிட்டார்.
இதில் முப்படைகளின் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.