புதிய டிசைன் முகக்கவசம் உற்பத்தியில் ஈடுபாடு காட்டும் முன்னணி நிறுவனங்கள்..!!

பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நகராக விளங்கும் திருப்பூர் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் பின்னர் மருத்துவ ஆடைகள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது ‌.

மருத்துவர்களுக்கு தேவையான முழு கவச உடை மற்றும் முக கவசங்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாரித்து அவற்றை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

தற்பொழுது ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் முக கவசம் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் உலக நாடுகளிலும் பொதுமக்கள் வெளியே வரும்பொழுது முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகக் கவசங்களில் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்தியும் பின்னலாடைகள் மூலமாக முககவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது குறித்து பல்வேறு முன்னணி நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆடைகளுக்கு ஏற்றவகையில் பொருந்தும் முககவசங்கள் மற்றும் பல்வேறு பிரிண்டிங் டிசைன்கள் அடங்கிய முகக் கவசங்கள் தயாரித்து வழங்குவதற்கான மாதிரிகளை முக கவசங்களை இந்த முன்னணி நிறுவனங்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிடம் கோரியுள்ளனர்.

இதன் மூலமாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு முக கவசம் வாயிலாக மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முக கவசங்களை ஏற்றுமதி செய்யப்பட்டால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என கருதிய இந்திய மத்திய அரசு முகக் கவசங்கள் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. ஆனால், முழு நாட்டிற்கும் தேவையான மொத்த முக கவசங்களையும் திருப்பூருக்கு ஆர்டர் கொடுத்தால் கூட 15 முதல் 20 நாட்களில் உள்நாட்டு தேவையை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களால் பூர்த்தி செய்ய முடியும் எனவும் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கினால் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இந்த முகக் கவசங்கள் வாயிலாக திருப்பூருக்கு கிடைக்கும் எனவும் இதன் மூலமாக பின்னலாடை துறையில் ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலை மாறி மீண்டும் புத்துயிர் பெறும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts