சீனாவை குற்றம் சுமத்தும் இந்தியா..!!

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை. அது சீனாவில் அமைந்துள்ள ஒரு ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்டது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதனை தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.

இது இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்பதால்¸ இதனுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவி;த்துள்ளார்.

பல நாடுகள் இதற்கான தடுப்பூசியை தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன என்றும் கட்காரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பாக இந்திய அரசாங்கத்தினால் சீனாவை தொடர்புப்படுத்தி முன்வைக்கப்பட்ட முதல் கருத்தாக இது அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து உருவானது என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts