பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்..!!அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா.

பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் லீடர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பாகுபலி படம் தான் அவருக்கு புகழை கொடுத்தது.

ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு மிஹீகா பஜான் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம். ஹைதராபாத்தை சேர்ந்த அந்த பெண் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனராக இருக்கிறார்.

இந்நிலையில் ராணாவின் அப்பாவான தயாரிப்பாளார் சுரேஷ் பாபு ஒரு பேட்டியில் ராணவுக்கும், மிஷீகாவுக்கு நீண்ட நாளாக பழக்கம் இருப்பதாகவும், ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், திருமணம் இந்த வருடம் நடைபெறும் என்றும் விரைவில் திருமணம் குறித்த தகவல்களை தகுந்த நேரத்தில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் எல்லோரும் வாழ்த்து தெரிவிக்க ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்ட திரிஷா மட்டும் இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts