4 ஆயிரத்து 213 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா..!!

இந்தியாவில் 4 ஆயிரத்து 213 பேருக்கு நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 70 ஆயிரத்து 780 பேர் இந்தியாவில் கொரோனாவினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு 2 ஆயிரத்து 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினத்திலேயே அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம், கடந்த 2 தினங்களில் மாத்திரம் 8 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts