இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 320 பேர் அழைத்து வரப்பட்டனர்..!!

கொரோனவைரஸ் பெரும்பரவலின் பின்னர் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 320 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னையில் இருந்து இன்று பிற்பகல் இவர்களை ஏற்றி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டுநாயக்கவை வந்தடைந்தது.

இலங்கை வந்தடைந்த இவர்கள் உடல் வெப்பநிலை உட்பட்ட உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஏற்கனவே பலர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பி;டத்தக்கது.

Related posts