அரசாங்கம் மறைமுகமாக சட்டத்தை மீறியுள்ளதாக ஜேவிபி குற்றம்..!!

7 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை நியமித்தன் மூலம் அரசாங்கம் மறைமுகமாக சட்டத்தை மீறியுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் காலத்தில் அரச பணியாளர்களை இடமாற்றம் அல்லது நியமனம் செய்வது சட்டரீதியற்றது.

எனினும் இதனை மீறி 7 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இது குறித்து தமது கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பவுள்ளதாக பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts