முகக்கவசங்கள் வழங்கி வைப்பு..!!

மக்களை பாதுகாக்கும் உயரிய பணியில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு உதவும் முகமாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வைத்திய சாலைகளுக்கு ஒரு தொகுதி முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தினை நேற்று (04) ஆரம்பித்துள்ளது.

மூதூர் வைத்தியசாலைப் பணிப்பாளரிடமும் சம்பூர் வைத்தியசாலையின் வைத்தியர் அ . சதீஸ்குமாரிடமும் சங்கத்தின் தலைவர் இரா. சச்சிதானந்தம் இமூதூர் வலய செயலாளர் த. கோணேஸ்வரன் ஆகியோரால் நேற்று (04) முகக்கவசங்கள் கையளிக்கப்பட்டது.

Related posts