மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவருபவர் மீது சட்டநடவடிக்கை..!!

கொரோனவைரஸ_க்கு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவருபவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

திருத்தணிகாசலம் என்பவர் ஊடங்கள் மூலமாக இது தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

எனினும் இவர் அரச அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்திவருபவர் என்றுக்கூறும் தமிழக அரசாங்கம் அவர்மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது

சென்னை ஜெயநகர் கோயம்பேட்டு பேருந்து நிலையத்துக்கு முன்பாக சித்தமருத்துவமனை ஒன்றை இவர் நடத்திவருகிறார்.

இவரின் செயற்பாடு காரணமாக மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது

Related posts