இன்று மாலை அல்லது இரவு மழை பெய்யும்..!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல்¸ மத்திய சப்ரகமுவ¸ வடமேல்¸ தென்¸ ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு¸ அம்பாறை மற்றும் அநுரதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேல்¸ தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கரையோரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை அந்தமான் கடலுடன் தொடர்புடைய தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் தாழ் அமுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஆழ்கடலில் தொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts