9 வாரங்களுக்கு பின்னர் உறவினர்களை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கிய இத்தாலி..!!

இத்தாலியில் சுமார் 9 வாரங்களுக்கு பின்னர் அந்நாட்டிலுள்ளவர்களுக்கு அவர்களின் உறவினர்களை பார்வையிட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்றாகும்.

இத்தாலியில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 717 ஆக பதிவாகியுள்ள நிலையில, 28 ஆயிரத்து 884 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts