வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!!

மேல், மத்திய, சபரகமுவ, தென், வடமேல் மற்றும் ஊவா மாவாணங்களில் இன்று (04) மாலை அல்லது இரவு வேளைகளி்ல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம்,மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் இன்று காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தரப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts