நாட்டுக்கு திரும்பிய இலங்கையர்களில் நட்சத்திர விருந்தகங்களில் தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளனர்.

லண்டனில் இருந்து இன்று நாட்டுக்கு திரும்பிய இலங்கையர்களில் பலர் தமது சொந்த செலவில் நட்சத்திர விருந்தகங்களில் தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

ஏனைய சிலர் அரசாங்கத்தினால் நடத்தப்படும் தியகம தொழில்நுட்ப நிறுவகத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்காக பல விருந்தங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் நியாய கட்டண அடிப்படையில் தங்கியிருக்கமுடியும் என்றும் முன்னதாக இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

குறித்த விருந்தகங்களில் ஏனைய நாட்களில் 20ஆயிரம் முதல் 40ஆயிரம் வரை கட்டணங்கள் அறவிடப்படும்.

எனினும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக நாளொன்றுக்கு 7500 ரூபாவை அறவிட விருந்தக உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார்.

Related posts