ஜப்பானில் அவசரகால நிலைமையை மேலும் நீடிக்க வாய்ப்பு..!!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் குறையாததால், நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ஷின்சோ அபே நாட்டின் அவசரகால நிலையை மே இறுதி வரை நீடிப்பார் என ஜப்பானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறும் செய்தி மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அவர் புதிய தடுப்பு நடவடிக்கைகளையும் அறிவிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

கடந்த, ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீடித்து ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டது.

ஜப்பானின் பயணத் தடை உத்தரவின் மூலம், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நுழைவுத் தடைபெற்ற மொத்த நாடுகளின் எண்ணிக்கை மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை 87 ஆகும்.

ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால், 14,877பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3981பேர் மீண்டுள்ளனர். மேலும், 487பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts