கிருமிநீக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ருநாகல் ஹெட்டிபொலயில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர கிருமிநீக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழமையாக கிருமிநீக்கல் நடவடிக்கைகளில் பயிற்சி தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்தே மேற்கொள்ளவேண்டு;ம்.

எனினும் தற்போது சுயாதீனமாக பலர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரியஅளவில் கலவைகள் மேற்கொள்ளாது கிருமிநீக்கல் செயற்பாடு மேற்கொள்ளப்படுமாகயிருந்தால் அது பயனற்ற செயலாகவே இருக்கும். இந்த கிருமிநீக்கல் நடவடிக்கையால் கொரோனவைரஸை கட்டுப்படுத்தமுடியாது என்றும் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தயாசிறி ஜெயசேகர¸ பொதுசுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலை பின்பற்றினாரா என்பது தெரியவில்லை என்றும் பொதுசுகாதார அதிகாரிகள் சங்கத்தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

Related posts