ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்க நடவடிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை மே மாதமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

விசாக பூரணை தினத்திற்கு முன்னதாக குறித்த கொடுப்பனவு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்

இதன்படி, மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளதாக பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத கொடுப்பனவை வழங்குவதற்காக அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திய விதத்திலே இந்த முறையும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Related posts