எதிர்வரும் மே 11ஆம் திகதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்படும்.

எதிர்வரும் மே 11ஆம் திகதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்படும். நிலையில் மதுபான விற்பனையகங்களை திறப்பதற்கான உத்தரவுக்காக காத்திருப்பதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு¸ களுத்துறை¸ கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மதுபான விற்பனையகங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரையை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மதுபானவிற்பனை அகங்கள் மூடப்பட்டுள்ளமையால் மதுவரிதிணைக்களத்துக்கு நாளொன்றுக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டமேற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோவைரஸ் தொற்றினால் மதுபான விற்பனையகங்கள் மூடப்பட்ட காலத்தில் தமது திணைக்களத்துக்கு 20 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்

இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள மதுபான விற்பனையகங்களில் மதுவகைகளின் கையிருப்பு தீர்ந்துப்போயுள்ளதாக தகவல்ககள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 20இல் மதுபானவிற்பனையகங்கள் திறக்கப்பட்டபோது முழுமையாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே மீண்டும் மதுபானவிற்பனையகங்களை திறக்கும் பரிந்துரை செய்யப்பட்டால் இந்தப்பகுதிகளில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts