ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

கொரோனவைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த “ஊரடங்கு உத்தரவு” விதிக்கப்படுவதை சரிசெய்து ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

கொரோனவைரஸ் ஆபத்தை எதிர்கொள்ள நாட்டில் இந்த நேரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது அவசியமான ஒன்றாகும்.

எனினும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் கீழ் சட்டப்படி விதிக்கப்பட வேண்டும்

இல்லையேல் அவற்றால் பொதுமக்களின் நலனுக்கு எந்த நன்மையும் இல்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இத்தகைய நடவடிக்கை சட்ட விதிக்கும்¸ இந்த நாட்டின் மக்களின் நல்வாழ்வுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது¸ என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கவும் பரிந்துரைகளை வழங்கவும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தை பிரகடனத்தின் அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது¸

ஆனால் இது தற்போதைய சந்தர்ப்பத்தில் அது மேற்கொள்ளப்படவில்லை.

மேலும்¸ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் கீழ் வர்த்தமானியை வெளியிடுவதன் மூலம் மக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

எனினும் அதுவும் தற்போதையநிலையில் செய்யப்படவில்லை¸

அதேநேரம் பொது சுகாதார அபாயங்கள் அவசரநிலைக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்க பொது பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் உள்ளது.

ஆனால் அந்த கேள்வியை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் கூட தற்போது பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கூட எந்த ஒழுங்குமுறையும் செய்யப்படவில்லை.

“ஆகவே¸ தற்போதைய‘ ஊரடங்கு உத்தரவு ’சட்டபூர்வமாக விதிக்கப்படவில்லை¸

உண்மையில்¸ நடப்பு சு10ழலில் இது போன்ற சட்டங்களின்; கடுமையான தேவையும் உறுதியும் தேவை என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பிரச்சனையின் மிகவும் தீவிரமான பொது முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தும் என்று தாம் நம்புவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டபின்னர் அவரை பிணையில் செல்ல அனுமதித்தபோது பிரதிவாதி ஊரடங்கு சட்டத்தை மீறவில்லை என்ற தமது வாதத்தை நுகேகொட நீதிவான் ஏற்றுக்கொண்டதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்

Related posts