இழந்த முடியை திரும்ப பெற இரவு முழுவதும் இத தடவி ஊறவிடுங்கள்..ஒரே வாரத்தில் அற்புதம் நடக்கும்..!!

தமிழர்கள் மிகவும் அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு காய் முருங்கை.

ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த முருங்கையின் எண்ணெய்யும் பல்வேறு நன்மைகளைக் கொண்டது.

இதனை சமையலில் பயன்படுத்தலாம் மற்றும் அத்தியாவசிய எண்ணெயாக பல்வேறு விதங்களிலும் பயன்படுத்தலாம்.

முருங்கை எண்ணெயில் ஓலிக் அமிலம் உள்ளது. அதனால் இது ஒரு மிகச்சிறந்த க்ளென்சராகவும், ஈரப்பதத்தைத் தரும் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுகிறது.

முடி வளர்ச்சியை தூண்டவும் இது உதவுகின்றது. ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தினை உணர முடியும்.

முருங்கை எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துவது?
  • தேவையான பொருட்கள்
  • முருங்கை எண்ணெய் – 8-10 துளிகள்
  • பாதாம் எண்ணெய் – 1 கப்
  • டீ-ட்ரீ அல்லது லாவெண்டர் எண்ணெய் – 8-10 துளிகள்
முருங்கை எண்ணெயை கூந்தலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது?
  • ஒரு கிண்ணத்தில் மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்னர் இந்த கலவையை ஒரு கண்ணாடி ஜாரில் மாற்றிக் கொள்ளவும்.
  • இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தலின் வேரில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
  • இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இப்படி செய்து இரவு முழுவதும் ஊறவிடவும்.
  • அடுத்த நாள் காலை, மூலிகை ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும் மற்றும் கண்டிஷ்னர் பயன்படுத்தவும்.
  • இந்த எண்ணெய்யை லேசாக சூடாக்கி பயன்படுத்துவதால் நன்மைகள் சற்று அதிகமாகக் கிடைக்கும்.

Related posts