இந்தாண்டு இறுதிக்குள் கொரானாவுக்கு தடுப்பூசி- ட்ரம்ப் நம்பிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை இந்தாண்டு இறுதிக்குள் பெற்றுக்கொடுக்க முடியுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மீண்டும் திற்ககப்படுமெனவும் ட்ரம்ப் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவிலேயே அதிகளவானோர் பலியாகியுள்ளனர்.

அங்கு இந்த தொற்றால் புதிதாக ஆயிரத்து 122 பேர் பலியாகியுள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அந்த நாட்டில் 26 ஆயிரத்து 459 பேர் இந்த தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 87 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.

Related posts