விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது..!!

மைசூர் பருப்பு மற்றும் தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றிற்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாவாகவும் 425 கிராம் எடை கொண்ட தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts