வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் இளம் யுவதி கிணற்றில் வீழ்ந்து பலி..!!

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02.05.2020) 10 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் த ற்கொ லை செய்துள்ளார்.

செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு (02.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார்.

அவர் கிணற்றில் வீழ்ந்ததினை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டெடுத்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உ யிரிழந்துள்ளார்.

த ற்கொ லைக்கான காரணம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts