ரி-20 பிளாஸ்ட் தொடர் ஒத்திவைப்பு: இரு வெளிநாட்டு வீரர்களின் ஒப்பந்தங்கள் இரத்து..

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக, 2020ஆம் ஆண்டு ரி-20 பிளாஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பல கழகங்கள் வெளிநாட்டு வீரர்களுடனான ஒப்பந்தங்களை நிறுத்த முடிவு செய்துள்ளன.

இந்தநிலையில், பல கழங்களை போலவே சர்ரே அணியும் இந்த பட்டியலில், இரண்டு வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொண்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் வீரரான சதாப் கான் மற்றும் அவுஸ்ரேலிய வீரரான டி ஆர்சி ஷோர்ட் ஆகியோரின் ஒப்பந்தங்களை பரஸ்பர புரிந்துணர்வுகளின் அடிப்படையில் சர்ரே அணி இரத்து செய்துள்ளது.

இதுகுறித்து சர்ரே கிரிக்கெட் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒத்திவைப்பு மற்றும் உள்நாட்டு பருவத்தின் ஒப்பனை குறித்த தற்போதைய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீரர்களின் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும். பரஸ்பரம் அடிப்படையில் இது ஒப்புக் கொள்ளப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக, ஜூலை 1ஆம் திகதி வரை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts