பிரதமருடன் இடம்பெற உள்ள கலந்தரையாடலில் கலந்து கொள்ள உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் குறித்த சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கு முன் நாடாளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்திய சில உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன அறிவித்துள்ளன.

எனினும், குறித்த சந்திப்பில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான காரணம் தொடர்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், குறித்த கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts