பாகிஸ்தான் சபாநாயகர், அவரின் சகோதரி, சகோதரியின் கணவன் ஆகியோருக்கு கொரோனா..!!

பாகிஸ்தானின் சபாநாயகர் அசாத் கெயிசர் இற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த இடுகை பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சபாநாயகரின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாகவும் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சபாநாயகரின் சகோதரி மற்றும் அவரின் கணவருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றமை உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts